top of page

நள்ளிரவு வேளையில் துயிலுமில்லத்தில் தீபம் ஏற்றுதல் மாலைப்பொழுதுக்கு மாற்றமானது ஏன்? துயிலுமில்லப்பாடல் மாற்றப்பட்டது ஏன்? 'துயிலும் இல்லப்பாடல்' என பொதுவாக அழைக்கப்படும் 'தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே' பாடல் ஈழப்போராட்ட காலத்தே எழுந்த பாடல்களுள் நின்று நிலைக்கும் ஒரு பாடலாகும். எப்பாடலை தவிர்த்துப் போனாலும் இப்பாடலை தவிர்க்கமுடியாத அளவிற்கு இது முக்கியத்துவம் பெற்றுவிட்டது. காரணம் ஆண்டுதோறும் நினைவுகொள்ளப்படும் மாவீரர் நாள் அப்பாடலை ஒலிக்கச் செய்கிறது அல்லது நினைக்க வைக்கிறது. ஈழப்போராட்ட காலத்தில் எழுந்த பாடல்களில் துயிலுமில்லப் பாடல் கொண்டுள்ள சில முக்கியத்துவ நோக்குகளை இவ்விடத்தே நோக்கலாம். துயிலும் இல்லப்பாடல் இரண்டு சந்தர்ப்பங்களில் முக்கியமாக ஒலிக்க விடப்பட்டது, ஒலிக்கவிடப்படுகிறது. ஒன்று போர்க்காலத்தில் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் ஒருவரின் வித்துடலினை புதைகுழியில் இடுவதற்கு முன்பாக வித்துடற் பீடத்திலே இடம்பெறும் உறுதியுரையினைத் தொடர்ந்து, துப்பாக்கி வேட்டுச் சத்தங்கள் மூன்று ஒலித்த பின்னே இப்பாடல் ஒலிக்கும். அத்துடன் உடல் கிடைக்கப்பெறாத மாவீரர்களுக்கான நினைவுக்கல் திரைநீக்கத்தின் போதும் துயிலுமில்லத்தில் இப்பாடல் ஒலிக்கும். மலரிடுதல், மண் போடுதல் என்பனவற்றிற்கு வேறு பாடல்களை புலிகள் கொண்டிருந்தனர். இரண்டாவது மாவீரர் நாளின்போது சுடர்கள் ஏற்றப்பட்ட பின்னர் இப்பாடல் ஒலிக்கவிடப்படும். இவையிரண்டுமே பிரதானமானவை. ●துயிலும் இல்லப்பாடல் மாற்றத்துக்குள்ளாகி மீளவும் ஒலிப்பதிவாக்கப்பட்டது ஏன்? தமிழீழ விடுதலைப் புலிகளினால் அறிமுகம் செய்யப்பட்ட பாவனையிலுள்ள துயிலும் இல்லப் பாடலானது தொகையறா, பல்லவி, அனுபல்லவி, இரு சரணங்களைக் கொண்டது. 'மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை' எனத்தொடங்கும் தொகையறாவும், 'தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே' எனத்தொடங்கும் பல்லவியும் உண்டு. 'எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள். ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்' என்பது அனுபல்லவி. முதலாவது சரணம் ஆரம்பத்தில் இப்படி அமைந்திருந்தது. நள்ளிரா வேளையில் நெய்விளக்கேற்றியே நாமுமை வணங்குகின்றோம். உங்கள் கல்லறை மீதிலெம் கைகளை வைத்தொரு சத்தியம் செய்கின்றோம். சாவரும் போதிலும் தணலிடை வேகிலும் சந்ததி தூங்காது – எங்கள் தாயகம் வரும் வரை தாவிடும் புலிகளின் தாகங்கள் தீராது. (எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்) இப்படி அமையப்பெற்றதே சரணம். காரணம் 1989 முதலாக ஆரம்பத்தில் குறிப்பிட்டளவு ஆண்டுகள் மாவீரர் நாளானது நவம்பர் 27ஆம் திகதி நள்ளிரவு வேளையில்தான் அனுட்டிக்கப்பட்டது. பின்னைய நாட்களில் மாலைப்பொழுதில் இடம்பெற்ற அத்தனை அம்சங்களும் முன்பு நள்ளிரவில்தான் நடந்தேறின. நள்ளிரவிலேயே அன்றைய நாட்களில் மக்கள் துயிலும் இல்லத்தில் சேர்ந்தனர். மக்கள் விழித்திருந்தே சுடர் ஏற்றினர். புலிகளின் தலைமையின் உரையும் நள்ளிரவில்தான் ஒலிபரப்பானது. காரணம் முதல் மாவீரன் சங்கர் அவர்கள் 1982இல் நள்ளிரா வேளையில் மரணித்ததான ஒருபதிவே தென்பட்டமை ஆகும். ஆயினும் மிகச்சிறந்த ஆவணவாதியும், புலிகளின் கல்விக்கழகக் பொறுப்பாளருமான வெ.இளங்குமரன் என்கிற பேபி அவர்கள் 1982இன் ஓர் ஆவணத்தை கண்டெடுத்துவிட்டார். அது புலிகளின் தலைமையின் பதிவு. மாவீரர் சங்கர் அவர்களுக்கானது. அதில் மாலை 06.05மணி என்பதே முதல் மாவீரரின் மரணிப்பு என்பதே பதிவாக காணப்பட்டது. உடனடியாகவே புலிகள் மாவீரர் நாளின் நேரத்தை மாற்றினர். நள்ளிரா தீபமேற்றல் மாலை 06.05 மணியானது. 1995இன் பின்னரே இம்மாற்றம் இடம்பெற்றதாக அறியமுடிகிறது. இது மட்டுமா? துயிலும் இல்லப் பாடலில் நள்ளிரா வேளை விளக்கேற்றுவதான வரிகள் உள்ளதே. அந்த நாட்களில் புலிகளால் மாவீரர் குடும்பங்களுக்கு வழங்கப்படும் மாவீரர் படங்களில் துயிலும் இல்லப்பாடலும் இடம்பெற்றிருக்கும். உடனடியாகவே பாடலின் சரணத்தினையும் புலிகள் மாற்றத்திற்குள்ளாக்கினர். கவிஞர் புதுவை இரத்தினதுரையே இப்பாடலை எழுதியவர். மேலே சொல்லிய முதற்சரணத்தில் உள்ள 'நள்ளிரா வேளையில் நெய்விளக்கேற்றியே நாமுமை வணங்குகிறோம்' எனும் வரியானது கீழ்வருமாறு மாறுதலானது. வல்லமை தாருமென்றுங்களின் வாசலில் வந்துமே வணங்குகின்றோம். என்பதே அவ்வரி. இதுவே இப்போது பாவனையில் உள்ளது. ஏனைய வரிகள் மாற்றம் பெறவில்லை. இவ்விடத்தே துயிலும் இல்லப் பாடலில் உள்ள இன்னுமொரு விடயத்தைச் சொல்ல வேண்டும். துயிலும் இல்லப் பாடலில் எந்த இடத்திலும் புலிகளின் தலைவரின் பெயர் இடம்பெறவில்லை. 'தலைவன்' என பொதுமைப்பட ஈரிடங்களில் வந்துள்ளதே தவிர அவரது பெயர் பாடலில் இடம்பெறவில்லை. உலகில் உருவாகிய தமிழ்ப்பாடல்களில் உலகெலாம் ஒரே திகதியில் ஒரே நேரத்தில் ஆண்டில் ஒரே ஒரு தடவை ஒலிக்கும் பாடல் எனும் பதிவும் புலிகளின் துயிலும் இல்லப்பாடலுக்கு உண்டு. இப்பாடலினை கவிஞர் புதுவை இரத்தினதுரை எழுத, இசைவாணர் கண்ணன் அவர்களின் இசையில் மாவீரர் சிட்டு, மணிமொழி, அபிராமி, வர்ணராமேஷ்வரன் ஆகியோர் பாடியிருந்தனர்.

All reactions: 62Moorththy Dinu, Danu Thiriyajuran and 60 others

0 views0 comments

அமெரிக்காவின் ஆயுத கறுப்புச் சந்தையாக விளங்கியது உக்கிரேன். விடுதலை அமைப்புகள் பலவற்றுக்கான ஆயுத கறுப்புச் சந்தையாக உக்கிரேன் விளங்கிவருகிறது.


எங்களுக்கு பெரும் அழிவுகளை உண்டாக்கிய ஸ்ரீலங்கா விமானப்படையின் மிகையொலி விமானங்களை ஆரம்பத்தில் இயக்கிய விமானிகள் உக்கிரேன் நாடடைச் சேர்ந்தவர்கள் மேலும் அவர்களே இலங்கை விமானிகளுக்குப் பயிற்சிகளையும் அளித்திருந்தார்கள்.


இறுதியுத்தகாலத்தில் எமக்கான பெருமளவு ஆயுதங்களை வழங்குவதாக ஒப்புதல் அளித்து பணத்தைப்பெற்று அமெரிக்காவுடன் இணைந்து ஏமாற்றியவர்களும் உக்கிரேனியா நாடு.


அன்று எமது ஆயுதக்கப்பல்களை அழிக்காமலும் , எமக்கான ஆயுதங்களை அதற்கான பணம் முழுவதையும் பெற்று தராமல் ஏமாற்றாமலும் விட்டிருந்தால் நாங்கள் நிச்சயம் எமது தாயகப் போரில் வென்றிருப்போம்.


இன்று உலகில் அமெரிக்காவினால் அதன் "தான்" என்கின்ற இறுமாப்புக்காக உலகில் பலபாகங்களில் பல்லின அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டுவருகிறார்கள்.


இன்று அமெரிக்காவின் பலிக்கடாவாக தங்களையே அழித்துக்கொள்ளுகிறது உக்கிரேன். ஒருவகையில் ரஸ்யா எடுக்கும் படையெடுப்பானது நியாயமானதென்றே கூறலாம்.


உக்கிரேனில் அமெரிக்கா தங்களது கைக்கூலி அமைப்புகளை உருவாக்கி ஆயுதங்களையும் கொடுத்து அவர்களுக்கு பயிற்சிகளையும் கொடுத்து ரஸ்யாவுக்கெதிராக பயன்படுத்திக்கொண்டிருப்பதன் விளைவேதான் இன்றைய ரஸ்யாவின் உக்கிரேன் மீதான படையெடுப்பாகும்.


அதாவது ரஷ்யா அமெரிக்காவின் மறைமுக அச்சுறுத்தல்களிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ளுமுகமாக இந்த இராணுவநடவடிக்கையைத் தொடங்கியுள்ளது எனலாம்.


இன்று மேற்குலகம் எல்லாம் ரசியாவின் ஆக்கிரமிப்பு யுத்தத்திற்கு எதிராக குரல் கொடுக்கத்தொடங்கியதோடு ரஸ்யாவுக்கெதிராக பொருளாதாரத் தடையையும் விதித்துள்ளன.


அன்று ஸ்ரீலங்கா இராணுவம் எங்கள் மீதான ஆக்கிரமிப்பைச் செய்து எம்மக்களை வகைதொகையின்றி கொல்லும்பொழுது வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த உலகம் இன்றுதான் விழித்துக்கொண்டிருக்கின்றது . அன்று ஸ்ரீலங்கா இராணுவம் செய்தது சரியென்றால் இன்று ரஸ்யா செய்வதும் சரியேதான்.


என்னதான் உலகத்தில் எங்கு போரென்றாலும் எங்கும் பாதிக்கப்படுவது அப்பாவிப் பொதுமக்களேதான் ஆதலால் எங்கென்றாலும் போரை வெறுக்கிறேன். போரின் வலிகளை பல தசாப்தங்களாக போருக்குள்ளே வாழ்ந்து அனுபவித்துள்ளேன்.


ஏகாதியபத்திய அரசுகளின் நலனுக்காகவும் , பலப்பரீட்சைக்காகவும் யாரோ அப்பாவிமக்கள்தான் பலிக்கடாவாக்கப்படுகிறார்கள் என்பதுதான் இங்கு நிதர்சனம்.


உக்கிரேன் அப்பாவி மக்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். உங்களின் நிலையை எண்ணி வருந்துவதோடு உங்களுக்காக கடவுளைப் பிரார்தித்துக்கொள்கிறேன்.

வாழ்க்கையின் சில கசப்பான உண்மைகள் என்ன?

50 ஐத் தாண்டி 60 க்குச் செல்லும் எனது நண்பர்களில் ஒருவரிடம் நான் கேட்டேன். அவர் என்ன மாதிரியான மாற்றத்தை உணர்கிறார்?


🌹1) என் பெற்றோர், என் உடன்பிறப்புகள், என் மனைவி, என் குழந்தைகள், என் நண்பர்கள் ஆகியோரை நேசித்த பிறகு, இப்போது நான் என்னை நேசிக்க ஆரம்பித்துவிட்டேன். எல்லாரையும் நேசிக்கும் நாம், நம்மை மறந்து போவது கசப்பான உண்மை.


2) 🌹நான் மட்டுமே"உலகம் இல்லை என்பதை உணர்ந்தேன். உலகம் என் தோள்களில் இல்லை. எங்கேயோ ஒரு மரம் வெட்டப்படுவது, எனக்கும் பிரச்சினை தான்.


3) 🌹நான் இப்போது சிறு சிறு விற்பனையாளர்களுடன் பேரம் பேசுவதை நிறுத்தி விட்டேன். எல்லாவற்றிற்கும் மேலாக, இன்னும் சில ரூபாய்கள் கொடுப்பது என் வாழ்க்கையை கீழே இறக்க போவதில்லை, ஆனால் அது ஏழை மகளின் பள்ளி கட்டணத்துக்கு உதவும்.

மாற்றத்திற்காக காத்திருக்காமல், நான் என்னை மாற்றி கொள்கிறேன். எல்லாவற்றிற்கும் மேலாக அவர் என்னை விட ஒரு சாதாரண வாழ்க்கைக்காக மிகவும் கடினமாக உழைக்கிறார்.


🌹4) நான் வாலிப வயதில் ரசித்து அனுபவிக்க முடியாமல் போன்றவற்றை அனுபவிக்கிறேன்.


5) 🌹முதியவர்கள் அவர்கள் கதையை சொல்லும் போது, ஏற்கனவே பலமுறை" விவரித்ததாகச் சொல்வதை நிறுத்தினேன். எல்லாவற்றிற்கும் மேலாக, கதை அவர்களை நினைவக பாதையில் நடந்து செல்லவும், கடந்த காலத்தை புதுப்பிக்கவும் செய்கிறது. 5 நிமிடம் காது கொடுத்து கேட்பதால் குடி மூழ்கி போகாது.


6) 🌹மக்கள் ஏன் தவறு செய்கிறார்கள் என்று எனக்குத் தெரிந்தாலும் அவர்களைத் திருத்த வேண்டாம் என்று கற்றுக்கொண்டேன். எல்லாவற்றிற்கும் மேலாக, அனைவரையும் சரியானவர்களாக மாற்றுவதற்கான பொறுப்பு என் மீது இல்லை. முழுமையை விட அமைதி மிகவும் விலைமதிப்பற்றது.


🌹7) நான் பாராட்டுக்களை எல்லாருக்கும் தாராளமாக தருகிறேன். எல்லாவற்றிற்கும் மேலாக இது பெறுநருக்கு மட்டுமல்ல, எனக்கும் ஒரு நல்ல மனநிலையை கொடுக்கும்


🌹8) ஒரு சிறிய கரி என் சட்டையில் படிந்தால் கவலைப்பட வேண்டாம் என்று கற்றுக்கொண்டேன். எல்லாவற்றிற்கும் மேலாக, ஆளுமை, தோற்றங்களை விட உனர்வில் தான் உள்ளது.


9) 🌹என்னை மதிக்காதவர்களிடமிருந்து நான் விலகிச் செல்கிறேன். எல்லாவற்றிற்கும் மேலாக, என் மதிப்பு அவர்களுக்குத் தெரியவில்லை என்பதே உண்மை.


10) 🌹எலி பந்தயத்தில் ( Rat race) என்னை விட யாராவது முன்னொக்கி செல்லும்போது நான் அமைதியாக இருக்கிறேன். எல்லாவற்றிற்கும் மேலாக, நான் ஒரு எலி அல்ல & நான் எந்த பந்தயத்திலும் இல்லை.


11) 🌹என் உணர்ச்சிகளால் ( ஏன் அப்படி கோபம்/அழுகை/வெறுப்பு கொண்டாய்?) சங்கடப்படக்கூடாது என்று நான் கற்றுக் கொண்டிருக்கிறேன். எல்லாவற்றிற்கும் மேலாக, என் உணர்ச்சிகள் தான் என்னை மனிதனாக்குகின்றன.


12) 🌹ஒரு உறவை முறிப்பதை விட ஈகோவை கைவிடுவது நல்லது என்று நான் கற்றுக்கொண்டேன். எல்லாவற்றிற்கும் மேலாக, என் ஈகோ என்னை ஒதுக்கி வைக்கும், ஆனால் உறவுகளுடன் இணக்கமாக இருந்தால் நான் ஒருபோதும் தனியாக இருக்க மாட்டேன்.


13) 🌹ஒவ்வொரு நாளும் கடைசியான நாளாக இருப்பது போல் வாழ கற்றுக்கொண்டேன்.


🌹14) எனக்கு எது மகிழ்ச்சியைத் தருகின்றதோ அதை நான் செய்கிறேன். எல்லாவற்றிற்கும் மேலாக, என் மகிழ்ச்சிக்கு நான் பொறுப்பு, அதற்கு கடமைப்பட்டிருக்கிறேன்.🌹

bottom of page