top of page

திசையை எட்டாகப் பிரித்த நம் முன்னோர்கள்..

கிழக்கு-மேற்கு-வடக்கு-தெற்கு-

வட கிழக்கு-வட மேற்கு-தென் கிழக்கு-தென் மேற்கு


திசையை எட்டாகப் பிரித்தவர்கள்,இசையை ஏழாக கொடுத்தார்கள்..

ஆ-ஈ-ஊ-ஏ-ஐ-ஒ-ஓள ( ச ரி க ம ப த நி)


இசையை ஏழாக கொடுத்தவர்கள், சுவையை ஆறாக பிரித்தார்கள்...

இனிப்பு-கசப்பு-கார்ப்பு-புளிப்பு -உவர்ப்பு-துவர்ப்பு


சுவையை ஆறாக கொடுத்தவர்கள்,நிலத்தை ஐந்தாக பிரித்தார்கள்...

குறிஞ்சி-முல்லை-மருதம்-நெய்தல்-பாலை


நிலத்தை ஐந்தாக பிரித்தவர்களகாற்றை நான்காக பிரித்தார்கள்...

தென்றல்-வாடை -கோடை -கொண்டல்


காற்றை நான்காக பிரித்தவர்கள்மொழியை மூன்றாக பிரித்தார்கள்..

இயல் -இசை-நாடகம்


மொழியை மூன்றாக பிரித்தவர்கள், வாழ்க்கையை இரண்டாக வகுத்தார்கள்...

அகம் -புறம்


கணவன் மனைவி வாழும் வாழ்க்கை

அக வாழ்க்கை...


வெளியில் இருக்கும் வியாபாரம் மற்றும் விவசாயம் எல்லாம்

புற வாழ்க்கை...


வாழ்க்கையை இரண்டாக வகுத்த தமிழரகள்...

ஒழுக்கத்தை மட்டும் ஒன்றாக வைத்தார்கள்...


அதைஉயிரினும் மேலாக வைத்தார்கள்...


இதைத்தான் அய்யன் வள்ளுவர் இரண்டு அடியில் அழகாகச் சொல்கிறார்...


"ஒழுக்கம் விழுப்பந் தரலான்

ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் !!

0 views0 comments

வணக்கம்

கவிச்சொந்தங்களே! 02/12/2023 அன்று கனடா தமிழாழி

காட்சியில் ஈழத்துக் கவியரங்கம்.

இவ்வாரம் கிராமியக் கவிதை!

தலைப்பு

* ஆத்தோரம் காத்திருக்கேன்* 16 வரிகள்

கிராமிய சொல்லாடல் ஒலிக்கட்டுமே. வாருங்கள் கவிச்சொந்தங்களே

தாருங்கள் தங்கள் கவிதைகளை.

தங்களின் கவிதைகள் 01/12/2023 முன் வந்தடைய வேண்டிய

📞 இல 075 013 0232

நன்றி!

கனடா தமிழாழி காட்சி

இலங்கைத் துணைச் செயலாளர்

வாசுகி வாசு -

கொழும்பு -இலங்கை

bottom of page