top of page

வள்ளுவர் கண்ட இல்லறம் அல்லதுகாதல் வாழ்க்கை

Writer's picture: CANADA THAMILAALICANADA THAMILAALI

வள்ளுவர் கண்ட இல்லறம்’ – சி.இலக்குவனார் ‘வள்ளுவர் கண்ட இல்லறம் அல்லது காதல் வாழ்க்கை’

  1. பதிப்புரை

தமிழுக்கென வாழ்ந்த பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்களின் குறிப்பிடத்தக்கப் பணிகளுள் ஒன்று குறள்நெறியைக் குவலயம் எங்கும் ஓங்கச் செய்ய வேண்டும் என்று பாடுபட்டது. ‘இருபதாம் நூற்றாண்டுத் திருவள்ளுவர்‘ எனத் தமிழ் உலகத்தவரால் அன்புடன் அழைக்கப் பெற்ற பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள், மாணாக்கர்களிடம் கற்பிப்பதை மட்டும் தம் கடமையாகக் கொள்ளாமல், மக்களிடையேயும் சங்க இலக்கிய மாண்புகளையும் தொல்காப்பியச் சிறப்புகளையும் திருக்குறள் நெறிகளையும் விளக்குவதையும் பரப்புவதையும் தம் குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்தவர்; இலக்கிய உலாக்களை அமைத்துக் கொண்டு ஊர்கள் தோறும் சென்று திருக்குறளைப் பரப்பிய பேரறிஞர்; ‘குறள்நெறி‘ என்னும் பெயரில் திங்கள் இதழ், திங்களிருமுறை இதழ், நாளிதழ் நடத்திக் குறள்நெறி அன்பர்களை உருவாக்கிய இதழியல் அறிஞர்; ’எல்லாரும் இந்நாட்டு மன்னர்’ , ‘அமைச்சர் யார்?’, ‘வள்ளுவர் வகுத்த அரசியல்’ முதலான பல நூல்கள் மூலம் படிப்போர் வட்டத்திலும் குறள்நெறி எண்ணங்களைப் பரப்பியவர். பேராசிரியர் சி.இலக்குவனாரின் நூற்படைப்புகளில் ஒன்றுதான் ‘வள்ளுவர் கண்ட இல்லறம் அல்லது காதல் வாழ்க்கை’ என்னும் அரிய நூல். 1971ஆம் ஆண்டு சென்னையிலுள்ள மீனா புத்தக நிலையம் இந் நூலை வெளியிட்டுள்ளது. இந்நூலை மறுபதிப்பாக வெளியிடுவதில் ‘இலக்குவனார் இலக்கிய இணையம்‘ பெருமை கொள்கிறது. இந்ந