top of page

யோ.புரட்சியின் முகநூலில் இருந்து . நனவுகள் கனவாகலாமா....

Writer's picture: CANADA THAMILAALICANADA THAMILAALI

நள்ளிரவு வேளையில் துயிலுமில்லத்தில் தீபம் ஏற்றுதல் மாலைப்பொழுதுக்கு மாற்றமானது ஏன்? துயிலுமில்லப்பாடல் மாற்றப்பட்டது ஏன்? 'துயிலும் இல்லப்பாடல்' என பொதுவாக அழைக்கப்படும் 'தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே' பாடல் ஈழப்போராட்ட காலத்தே எழுந்த பாடல்களுள் நின்று நிலைக்கும் ஒரு பாடலாகும். எப்பாடலை தவிர்த்துப் போனாலும் இப்பாடலை தவிர்க்கமுடியாத அளவிற்கு இது முக்கியத்துவம் பெற்றுவிட்டது. காரணம் ஆண்டுதோறும் நினைவுகொள்ளப்படும் மாவீரர் நாள் அப்பாடலை ஒலிக்கச் செய்கிறது அல்லது நினைக்க வைக்கிறது. ஈழப்போராட்ட காலத்தில் எழுந்த பாடல்களில் துயிலுமில்லப் பாடல் கொண்டுள்ள சில முக்கியத்துவ நோக்குகளை இவ்விடத்தே நோக்கலாம். துயிலும் இல்லப்பாடல் இரண்டு சந்தர்ப்பங்களில் முக்கியமாக ஒலிக்க விடப்பட்டது, ஒலிக்கவிடப்படுகிறது. ஒன்று போர்க்காலத்தில் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் ஒருவரின் வித்துடலினை புதைகுழியில் இடுவதற்கு முன்பாக வித்துடற் பீடத்திலே இடம்பெறும் உறுதியுரையினைத் தொடர்ந்து, துப்பாக்கி வேட்டுச் சத்தங்கள் மூன்று ஒலித்த பின்னே இப்பாடல் ஒலிக்கும். அத்துடன் உடல் கிடைக்கப்பெறாத மாவீரர்களுக்கான நினைவுக்கல் திரைநீக்கத்தின் போதும் துயிலுமில்லத்தில் இப்பாடல் ஒலிக்கும். மலரிடுதல், மண் போடுதல் என்பனவற்றிற்கு வேறு பாடல்களை புலிகள் கொண்டிருந்தனர். இரண்டாவது மாவீரர் நாளின்போது சுடர்கள் ஏற்றப்பட்ட பின்னர் இப்பாடல் ஒலிக்கவிடப்படும். இவையிரண்டுமே பிரதானமானவை. ●துயிலும் இல்லப்பாடல் மாற்றத்துக்குள்ளாகி மீளவும் ஒலிப்பதிவாக்கப்பட்டது ஏன்? தமிழீழ விடுதலைப் புலிகளினால் அறிமுகம் செய்யப்பட்ட பாவனையிலுள்ள துயிலும் இல்லப் பாடலானது தொகையறா, பல்லவி, அனுபல்லவி, இரு சரணங்களைக் கொண்டது. 'மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை' எனத்தொடங்கும் தொகையறாவும், 'தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே&#