சுமந்திரனை அமெரிக்கா ஒருபோதும் அழைக்கவில்லை என்ற எமது மூல அறிக்கையிலேயே நாம் இன்னமும் நிற்கின்றோம்.
இலங்கையின் பிரதிநிதியாக பயணித்து தமிழர்களை பலவீனப்படுத்த அமெரிக்காவில் சுமந்திரன்.
இலங்கைக்கு எதிராக லண்டனில் உள்ள உ லகளாவிய உரிமை உண்மைநிலைகள் நிர்வாகம் (GRC ) இனப்படுகொலை வழக்கை பதிவு செய்தது என்பதை நாம் அறிவோம்.
தற்போது இந்த வழக்கு ஐசிசி வழக்கறிஞரின் கையில் உள்ளது.
ஐசிசியின் படி இந்த வழக்கை எடுத்துக்கொள்வதற்கான தீர்ப்பைப் பார்த்த பிறகு, இலங்கை இனப்படுகொலையை விசாரிக்க ஐசிசி வழக்கறிஞர் இந்த வழக்கை ஐசிசி நீதியரசருக்கு அனுப்பலாம்.
ஐசிசி வழக்கிலிருந்து இலங்கையை விடுபடுவதற்கு முயற்சி இது. ஐசிசி வழக்கறிஞரை முறியடிக்க அமெரிக்காவுக்கு அதிகாரம் உள்ளதா என்பது தெரியவில்லை.