அமெரிக்க உளவு நிறுவன தலைமை அலுவலகம்(பெண்டகனில்) இருந்து 25 ஐரோப்பிய நாடுகளுக்கு ரகசிய தகவல் ஒன்று பரிமாறப்பட்டுள்ளது. இதில் தற்சமயம் எடுக்கப்பட்ட சாட்டலைட் புகைப்படம் ஆதாரமாக காட்டப்பட்டுள்ளது. சுமார் 90,000 ஆயிரத்திற்கும் அதிகமான ரஷ்ய ராணுவம், உக்கிரைன் எல்லையில் நிலை கொண்டுள்ளது. இது ரஷ்யாவின் 90 சத விகித ராணுவத்தையே அன் நாடு உக்கிரைன் பக்கம் நகர்த்தியுள்ளதை காட்டுகிறது என்றும். ரஷ்யா நிச்சயம் உக்கிரைனை கைப்பற்ற போர் ஒன்றில் இறங்கும், அதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தயாராக இருக்க வேண்டும் என்று, அமெரிக்கா சற்று முன்னர் எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்காவின் உளவு பார்க்கும் சாட்டலைட் எடுத்த புகைப்படம் பெரும் அதிர்ச்சி தரும் விடையமாக உள்ளது.
ரஷ்யா ஓசை படாமல் தனது ராணுவத்தின் மிகப் பெரிய கட்டமைப்பை உக்கிரைன் பக்கமாக நகர்த்தியுள்ளது. அது போக சுமார் 12,000 ஆயிரம் டாங்கிகளையும் உக்கிரை நோக்கி நகர்த்தியுள்ளது. இதில் ரஷ்யாவின் அண்டை நாடுகள் ஆன, லட்வியா, எஸ்டோனியா மற்றும் லித்துவேனியா ஆகிய நாடுகள் பெரும் அச்சத்தில் உள்ளது. மிகப் பெரிய நாடான உக்கிரை மீது ரஷ்யா படை எடுக்குமாயின் , இந்த சின்னஞ் சிறிய நாடுகள் எம்மாத்திரம் என்ற கேள்வி எழுகிறது.
இதேவேளை மற்றுமொரு அண்டை நாடான பெலருஸ், ரஷ்யாவின் மாஜி மாநிலம் போலவே இருக்கிறது. இதனால் ரஷ்யா பெலருஸ் நாட்டை வைத்துக் கொண்டு பிராந்தியத்தில் பெரும் சிக்கலை தோற்றுவித்து வருகிறது. உக்கிரைனில் போர் வெடித்தால் ஜேர்மனி, பிரான்ஸ் போன்ற பல நாடுகளுக்கு செல்லும் கேஸ் (எரி வாயு) தடைப்பட பெரும் வாய்ப்புகள் உள்ளது.
Comments